இராணுவத்தினரால் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களுக்கு பெறுமதியான மரக் கன்றுகள் பகிர்ந்தளிப்பு
27th December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப்பிரிவின் 3ஆவது கஜபா படையணியினரால் கிளிநொச்சி அம்பகாமம் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பெறுமதியான 2000 க்கும் மேற்பட்ட கன்றுகள் கடந்த வியாழக்கிழமை (21)ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட்டன.
57ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் ஆலோசனை மற்றும் 574ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் சந்தன சமரவீர அவர்களின் மேற்பார்வையில் கீழ் அம்பகாமம் பிரதேசத்தை தேர்தெடுத்து 50 குடும்பங்களுக்கு இக் மர கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இராணுவத்தினரால் பகிர்ந்தளிக்கப்பட்ட இந்த மரக்கன்றுகளில் பலா>ஈரபலா>மா>போன்ற பொருளாதார அபிவிருத்திற்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
|