கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சரணாலய வழிமுறைகள் (பிலிவெத் புரன்னோ)
27th December 2017
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு அமைய வெலிகந்த பிரதேசத்தில் வரிய குடும்பத்தில் வாழும் பாடசாலை சிறுவர்களின் நிலைமையை கருத்தில் கொணடு ரூபா ஆறு இலட்சத்துக்கு (600.000) பொறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்ளை மஹரகம சரணாலய வழிமுறைகள் (பிலிவெத் புரன்னோ) அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித பனான்வல அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பரிசு வழங்கும் நிகழ்வு நத்தார் நிகழ்வோடு வெலிகந்த திம்புலான கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
சரணாலய வழிமுறைகள் (பிலிவெத் புரன்னோ) அமைப்பின் மரியாதைக்குரிய கொட்டாவ ஹேமவன்ச தேரர் மற்றும் சரணாலய வழிமுறைகள் (பிலிவெத் புரன்னோ) அமைப்பின் அங்கத்தவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பரிசு பொதிகள் வழங்கப்பட்டது.
திம்புலான கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்ககளினால் சரணாலய வழிமுறைகள் (பிலிவெத் புரன்னோ) அமைப்பின் அங்கத்தவர்களுக்கு பாடசாலை அதிபர் அவர்களினால் தமது நன்றியை தெரிவித்துக் நிமித்தம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் தமது திறமையை வெளிகாட்டி கலாச்சார நடனம் ஒன்றை வழங்கினர்.
இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியை மேற்கொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களுக்கு இம் பெற்றௌர்களினால் பாராட்டுகளும் கிடைக்கப்பெற்றது.
திம்புலான பராக்கிரம விகாரையின் மரியாதைக்குரிய பூஜ்ய அஹுன்கல்லெ சித்தலங்கார தேரர் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் சம்மந்த அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஆர்.ஏ.டி ரணசிங்க அவர்களும், சிவில் சம்மந்த தலைமை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.எம்.எஸ் சமரகோன் அவர்களும் பாடசாலை சிறுவர்களும் பெற்றௌர்களும்.
ஆசிரியர்களும் இப் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
|