2017 ஆம் ஆண்டிற்கான தேசிய யூடோ போட்டிகளில் இராணுவத்தினருக்கு வெற்றி

21st December 2017

இலங்கை இராணுவத்தின் ஜூடோ அணியினர் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டிகள் (21) ஆம் திகதி மதியம் விளையாட்டுதுறை அமைச்சின் உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதான விருந்தினராக தேசிய விளையாட்டு நிறுவகத்தின் இயக்குநர் திரு. சுஜீத் ஜெயலத் பங்கேற்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது டிசம்பர் 20 - 21 ஆம் திகதிகளில் தீவு முழுவதிலும் உள்ள 80 விளையாட்டுக் கிளைகளை பிரதிநிதித்துவபடுத்தி350 ஆண் மற்றும் பெண் ஜூடோ வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளில் இறுதிச் சுற்று இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையணியினர் இடையில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் இலங்கை இராணுவம் 57.5 மதிப்பெண்களை பெற்று முதலாவது இடத்தையும்,இலங்கை விமானப்படை 43.5 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

மகளீர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதி சுற்றுப் போட்டியில் இராணுவ மகளீர் படையணி 44.5 மதிப்பெண்களை பெற்று முதலாவது இடத்தையும் , இலங்கை பொலிஸ் மகளீர் அணியினர் 14 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

லான்ஸ் கோப்ரல் ஜே.எம். என் சில்வா ஜூடோ போட்டியில் சிறந்த பெண் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

இராணுவ ஜூடோ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் சாந்த தெஹிவத்த, செயலாளர் லெப்டினென்ட் கேணல் சுமேத விஜேகோன், இராணுவ அதிகாரிகள் மற்றும் விளையாட்டுதுறை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

|