முய்தாய் விளையாட்டுக்களின் முதல் சுற்று முடிவு

20th December 2017

இராணுவ விளையாட்டுக் கழத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முய்தாய் விளையாட்டு போட்டிகள் அசேலபுர 3ஆவது பொறிமுறை காலாட் படையணியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (17) இடம் பெற்றது.

இப் போட்டியானது முய்தாய்ப் போட்டிகள் உள்ளடங்களான விடயங்களை மையப்படுத்தி இடம் பெற்றது.

இப் போட்டிகளில் 40 ஆண் போட்டியளார்கள் 10 போட்டிகளில் கலந்து கொண்டதுடன் 5 பெண் போட்டியார்கள் 5 வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இப் போட்டியின் ஒவ்வொறு 3சுற்றுக்களும் 2 நிமிட மற்றும் 1நிமிட இடை வேளைகளின் வீதம் இடம் பெற்றது.

மேலும் இப் போட்டிகள் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் மனோஷ் முத்தநாயக்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது.

கொமாண்டோ தலைமையகப் படையினர் ஆண்களுக்குறிய பிரிவில் இரு வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இலங்கை சமிக்ஞைப் படையினர் மற்றும் விஜயபாகு காலாட் படையினர் போன்றௌர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும் பொறிமுறை காலாட் படையணி மற்றும் பொறியியல் சேவைப் படையினர் போன்ற படையணிகள் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

அந்த வகையில் 5ஆவது (தொண்டர்) மகளிர்ப் படையினர் 3வெற்றிகளை ஈட்டியதுடன் 2ஆவது (தொண்டர்) மகளிர்ப் படையினர் மற்றும் 3ஆவது (தொண்டர்) மகளிர்ப் படையினர் போன்றனர் குழுப் போட்டிகளில் வெற்றியீட்டியர்.

மொத்தமாக 33சண்டைப் போட்டிகள் இடம் பெற்றன.

இப் விளையாட்டுக்களின் ஆரம்பத்தில் இம் முய்தாய் விiயாட்டு கழகத்தினரிடையேயான தெரிவூப் போட்டிகள் இலங்கை இராணுவ முய்தாய் விiயாட்டு கழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (15) இடம் பெற்றது.

இப் போட்டிகளில் முய்தாய் விளையாட்டுப் பயிலுனர்களால் பலவாறான பாய்தல் குத்துச் சண்டை விதமான போட்டிகள் இம் மாணர்களால் நிகழ்த்தப்பட்டது.

இப் போட்டிகளில் கொமாண்டோ ஸ்நைபர் படையினர் மற்றும் புலனாய்வூப் படையினர் போன்றௌரின் பயிற்றுவிப்புக்களும் இடம் பெற்றன.

இம் முய்தாய்ப் போட்டிகளில் .இலங்கை இராணுவ மகளிர் படையினர் பாரிய பங்காற்றினர். அத்துடன் இவர்களது விசேட திறமைகள் உள்ளடங்களான விளையாட்டு விதிமுறைகளும் எடுத்துக் காட்டப்பட்டது.

|