57ஆவது படைப் பிரிவினரால் முதியோர் இல்லத்துக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
20th December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 571,57 படைப்பிரிவின் 9ஆவது விஜயபாகு காலாட்படையணியனரால் கிளிநொச்சி பிரதேசத்தின் எஸ்.கே மலயாலபுரம் முதியோர் இல்லத்துக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு (19) ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து 9ஆவது விஜயபாகு காலாட்படையணியனரால் 29 முதியோர்களுக்கு மதிய உணவும்அத்தியவசிய பொருட்கள் உட்பட பரிசுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் அதே பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கும் இராணுவத்தினரால் பரிசுகளும் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் அஜித் காரியகரவன அவர்களின் பணிப்புரைக்கு அமைய 57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந் நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதான விருந்தினராக கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் அஜித் காரியகரவன அவர்கள் கலந்து கொண்டாதோடு 571ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் அஜித் கொலம்பத்தன்ரி அவர்கள் உட்பட் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.
|