இராணுவத்தினருக்கு இடம் பெற்ற ஆவணங்கள் கையாளும் முறைக் கருத்தரங்கு
20th December 2017
ஆவணங்கள் கையாளும் முறை தொடர்பான கருத்தரங்கு தேசிய ஆவணத் திணைக்களத்தின் தலைமையில் சமிக்ஞைப் படையணித் தலைமையக கேட்போர் கூடத்தில் சமிக்ஞைப் படையணியின் உயர் அதிகாரியவர்களின் பங்களிப்புபோடு கடந்த திங்கட் கிழமை (18) இடம் பெற்றது.
இக் கருத்தரங்கானது இராணுவ ஆவணங்களைச் சரியான முறையில் நடைமுறைப் படுத்தல் மற்றும் அவற்றை நீண்ட நாட்கள் பாதுகாத்தலின் முக்கியத்துவம் கையாளும் முறைகள் போன்றவற்றை முக்கிய நோக்காகக் கொண்டு இடம் பெற்றது.
இப் பாடநெறிக்கான விரிவுரையயை தேசிய ஆவணத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளரான திருமதி திலினி லியனகே மற்றும் கைவிணை உதவியாளரான திருமதி எச் கே அசோக போன்றோரால் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
|