புதிய இராணுவ நிர்வாகப் பணிப்பாளர் பதிவியேற்பு

16th December 2017

இராணுவ நிர்வாகப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் தேவிந்த பெரேரா அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (15) காலை மத வழிபாட்டு ஆசிகளுடன் பதவியேற்றார்.

இதன் போது மஹா சங்கத்தின் பௌத்த மத தேரர்களால் செத் பிரித் வழிபாட்டுடன் இராணுவ நிர்வாகப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் அவர்கள் தமது உத்தியோக பூர்வ கையொப்பத்தை இட்டு கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ நிர்வாகப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் அவர்கள் தமது சக அதிகாரிகளுடன் இணைந்து புகைப்படத்திலும் கலந்து கொண்டார்.

பிரிகேடியர் தேவிந்த பெரேரா அவர்கள் மேஜர் ஜெனரல் சுதந் பெரோ அவர்களின் கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் இவ் அதிகாரியவர்கள் 58ஆவது கட்டளை அதிகாரியாக கடமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

|