இராணுவத்தினரால் மரக்கன்றுகள் விநியோகம்
14th December 2017
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மரையம்பத்து பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு தெங்கு பயிர்ச் செய்கைக்காக தென்னங் கன்றுகள் தெங்கு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரனையுடன் 68 ஆவது படைப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் (13) ஆம் திகதி புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.
68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல்ரசிக பெர்ணாந்து அவர்களது எண்ணக் கருவிற்கமைய 1000 தென்னங்கன்றுகள் இராணுவத்தினரால் விநியோகிக்கப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பணிப்புரைக்கமைய ஒட்டுசுட்டான் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர் எம் ரத்னாயக அவர்களது அனுசரனையுடன் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்றது.
|