இராணுவ உளநலப் பணிப்பகத்தினால் இடம் பெற்ற நேர்மறை சிந்தனை எனும் தலைப்பிலான கருத்தரங்கு
14th December 2017
இராணுவப் படையினரின் உளநிலையை மேம்படுத்தும் நோக்கில் மீண்டுமோர் நேர்மறை சிந்தனைகள் எனும் தலைமைப்பிலான கருத்தரங்கு இராணுவ உளநலப் பணிப்பகத்தினால் கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றம் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் டிசெம்பர் மாதம் 13 மற்றும் 14 திகதிகளில் இடம் பெற்றது.
கிளிநொச்சிப் நெலும்பியஸ கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இக் கருத்தரங்கில் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக 638 படையினர் கலந்து கொண்டனர்.
இவ்வாறான கருத்தரங்கானது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கடந்த வியாழக் கிழமை (14) , 30 இராணுவ அதிகாரிகள் மற்றும் 635 படை வீரர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.
இக் கருத்தரங்கிற்கான விரிவுரையை வைத்தியர் சமிந்த சிறிவர்தன அவர்கள் நிகழ்த்தினார்.
அந்த வகையில் இக் கருத்தரங்கானது இராணுவ தலைமையகத்தின் உளநல நடவடிக்கைப் பணிப்பகத்தின் ஒருங்கிணைப்போடு இடம் பெற்றது.
|