தாமரைத் தடாகத்தில் இராணுவ நத்தார் கரோல் கீத நிகழ்வுகள்
11th December 2017
இலங்கை இராணுவத்தினரின் வருடாந்த நத்தார் கரோல் கீத நிகழ்வுகள் இராணுவ கிறிஸ்தவ மையம் மற்றும் இராணுவ நிறைவேற்று பரிபாலனை மையம் போன்றவற்றின் ஒருங்கிணைப்போடு எதிர் வரும் 14ஆம் திகதி டிசெம்பர் மாதம் கொழும்பு -7 உள்ள தாமரைத் தடாகத்தில் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் இடம் பெறும்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கபில வைத்தியரத்தின அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் முன்னய இராணுவத் தளபதிகள் ,ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் 2017ஆம் ஆண்டிற்கான நத்தார் கரோல் கீத நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
|