கிளிநொச்சிபாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
10th December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப்பிரிவின் தலைமையில் துணுக்காய் தென்னயன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலைமாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்கள் விடுத்தவேண்டுகோளிற்கமையகொழும்பில் உள்ள திரு நீல் வீரசிங்க அவர்களினால் இந்த நன்கொடைகள் பாடசாலை மாணவர்களுக்கு (07) ஆம் திகதி வியாழக் கிழமைவழங்கப்பட்டது.
துணுக்காய் பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தை சேர்ந்த 91 பாடசாலை மாணவர்களுக்கு இவைகள் வழங்கப்பட்டன.
இந்த பாடசாலை மாணவர்களுக்கு ரூ. 250,000.00.பெறுமதிமிக்க பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. அத்துடன் பாடசாலை கட்டிட நிதிக்காக 100,000.00 ரூபாயும் இந்த அனுசரனையாளரினால் வழங்கப்பட்டது.
பாடசாலை கட்டிட நிர்மான பணிகள் 30 இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன, அனுசரனையாளரான திரு. நீல் வீரசிங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , பாடசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
|