மத்தியபாதுகாப்பு படையினர் மரநடுகை பணிகளில்

10th December 2017

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையினரால்சமனலவெவ நீர்த்தேக்கத்தில்டிசம்பர் 7, 8 ஆம் திகதிகளில் மரநடுகை பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய பாதுகாப்பு படைத் தளபதிமேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய ஒரு அதிகாரி உட்பட32 படைவீரர்களது பங்களிப்புடன் மரநடுகை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மரநடுகை திட்டத்தின் கீழ்200 கிட்டுல் கன்றுகள், 200 கரும்பு கன்றுகள், 500 மீ விதைகள், 250 களுவர கன்றுகள் மற்றும் 25 சுதேச மருந்து மரங்கள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் அதிகாரி திரு.எம்.பி.எல்.ஆர் குணவர்தன, மின்சார சபையின் பிரதான பொறியியலாளர்திரு.எச் அம்பேபிடிய சமனலவெவ நீர்வள மின் நிலையம் மற்றும் திருமதி ரிஷித பத்மிலா ஆகியோர் பங்கேற்றனர்.

|