233 ஆவது படையினரால் இடம் பெற்ற வலிக்கந்தை சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு

10th December 2017

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலையைகத்தின் 23ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினரால் 2017ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வலிக்கந்தை மகா வித்தியாலய மாணவர்களுக்கான இருநாள் 29-30 கருத்தரங்கானது நவம்பர் மாதம் இப் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இக் கல்விக் கருத்தரங்கில் வலிக்கந்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 125 மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இவர்களுக்கான கணித மற்றும் விஞ்ஞானப் பாடங்கள் புகட்டப்பட்டன. கணித பாடத்திற்கான கருத்தரங்கை மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு திலிப குணவர்தன மற்றும் கேகாலைப் பிரதேச வீதிப் புனரமைப்பு அதிகாரசபையின் (RDA) பொறியியலாளரான திரு தசுன் உதார அவர்காளல் கணிதப் பாடமும் மாணவர்களுக்கு புகட்டப்பட்டன.

இக் கருத்தரங்ககை 233ஆவது படைப் பிரிவின் தொடர்பாடல் இணைப்பாளரான மேஜர் கே டபிள்யூ ஆர் பி குமார அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

|