புதிய இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் கேர்ணல் கெமடாண்ட் பதவியேற்பு
9th December 2017
மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணி கேர்ணல் கெமடாண்ட் ஆக தமது கடமைப் பொறுப்பை கடந்த வெள்ளிக் கிழமை (8).
காலை (8) அபேபுஸ்ஸவிலுள்ள இலங்கை இராணுவ சிங்கப் படையணித் தலைமையகத்தில் 09ஆவது தளபதியாக (SLSR) பதவியேற்றார்.
அந்த வகையில் இவ்வாறு இப் படைத் தலைமையகத்திற்க வருகை தந்த தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு இலங்கை இராணுவ சிங்கப் படையணித் தலைமையகத்தின் சென்டர் கெமடாட்ன்ட் பிரிகேடியர் கித்திசிறி லியணகே அவர்களால் வரவேற்கப்பட்டார்.
மேலும் இக் கேர்ணல் கெமடாண்ட் அவர்களுக்கு மத வழிகாடுகள் மற்றும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் இவரால் இப் படைத் தலைமையக வளாகத்தில் நாக மர நடுகை இடம் பெற்றதுடன் போரின் போது உயிர்தியாம் செய்த இலங்கை இராணுவ சிங்கப் படை வீரர்களது நினைவூத் துhவிக்கு அஞ்சலியூம் செலுத்தப்பட்டது.
அத்துடன் இப் புதிய கேர்ணல் கெமடாண்ட் அவர்கள் தமது அதிகாரபூர்வ கையொப்பத்தை இட்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் சூழ தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.
அத்துடன் இப் புதிய கேர்ணல் கெமடாண்ட் அவர்கள் அதிகாரிகள் மற்றும் அனைத்து சாதாரணப் படையினருடனான புகைப் படத்திலும் கலந்து கொண்டார்.
இதே வேளை மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தளபதியாகவும் காணப்படுகின்றார்.
|