யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்களால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு
8th December 2017
யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்சஷ ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் அன்மையில் இடம் பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் யாழ் மாவட்ட ரீதியில் சிறந்த சித்தியை எய்திய மாணவர்களுக்கான பிரிசில்கள் வழங்கும் விழா இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது இரு புலமைப் பரிசில்கள் இப் படைத் தலைமையகத்தின் அனுசரையோடு மாணவர்களுக்காக வழங்கி வைக்கப்பட்டது.
மேலும 5ஆம் தர புலமைப் பரீட்சையில் யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்கள் சிறந்த சித்தியை எய்திருந்தனர். அந்த வகையில் சென் ஜோன் பொஸ்கோ கல்லுரியின் அநாதிக்கா உதயகுமார் அகில ரீதியில் 194புள்ளிகளைப் பெற்று 17ஆவது இடத்தையும் (1ஆவது இடத்தை யாழ் மாவழ்டத்தில் தமிழ் மொழியில் தோற்றி பெற்றுள்ளார்). மைத்திரி ரேய் சென் ஜோன் பொஸ்கோ கல்லுாரி மற்றும் மாதகல் விக்கிணேஸ்வரா வித்தியாலய பேதீஷ்வரம் அபிஷேக் போன்ற மாணவர்கள் அகில ரீதியில் 193புள்ளிகளைப் பெற்று 18ஆவது இடத்தையும் (2ஆவது இடத்தை யாழ் மாவழ்டத்தில் தமிழ் மொழியில் தோற்றி பெற்றுள்ளார்).
இவர்களது திறமையைப் பாராட்டி யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியவர்களால் பாடசாலைப் பொதிகள் உள்ளடங்கிய பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மதகுருமார்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் கலந்து கொண்டனர்.
|