வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் . அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு வருகை
8th December 2017
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா அலுவலகத்தின் தலைவர்திருமதி அன்னி மெலோட் மற்றும் நாடின் ஜோசே போன்ற அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தயோகபூர்வமான விஜயத்தைமேற்கொண்டனர்.
இவர்களுடன் கொழும்புசெஞ்சிலுவைச் சங்கஅலுவலகத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்டொனடோயோ அவர்களும் இணைந்துகொண்டார்.
இவர்கள் அனைவரும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்சியந்த ராஜகுரு அவர்களை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.. இந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளை முல்லைத்தீவு படைத்தளபதி வரவேற்றார்.இச் சந்திப்பு (5) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
பாதுகாப்புப் படையினரால் முல்லைத்தீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும்அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொண்ட சேவைகளை மதித்து இராணுவம் தமது நன்றிகளை தெரிவித்தது.
இந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளது வருகையையிட்டு படைத் தலைமையகத்திலுள்ள பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் இந்த அதிகாரிகள் கையொப்பமிட்டனர். இறுதியில் படைத் தளபதியினால் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளுக்கு நினைவு சின்னங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் அன்றைய தினம் இந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள்கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனை அவர்களை கிளநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
|