23 ஆவது படைப் பிரிவில் தற்காப்பு கலை பயின்ற படையினர்
6th December 2017
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 57 படையினருக்கு இக் கலையில் சிறந்து விளங்கும் அனுபவமிக்க 1ஆவது கொமாண்டே படையினர தற்காப்புக் கலைப் பயிற்ச்சிகளின் 3ஆம் பயிற்ச்சிப் பிரிவில் வழங்கினர்.
அந்த வகையில் இவ் 3ஆவது தற்காப்புக் கலைப் பயிற்ச்சியானது கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அவர்களின் ஆலேசனைக்கிணங்க இப் பயிற்ச்சிகள் பயிற்றுவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 3ஆவது தற்காப்புக் கலைப் பயிற்ச்சிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது கொமாண்டோப் படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (04) கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் 22,23மற்றும் 24ஆவது படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் கிழக்கின் இராணுவ முன் அரங்கு பராமரிப்பு வலய அதிகாரிகள் உள்ளடங்களாக பல உயர் அதிகாரிகள் பிரிகேடியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
|