கனடா உயர் ஸ்தானிகர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

3rd December 2017

இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் இணைந்து, யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வமான விஜயத்தைமேற்கொண்டனர்.

அதில் முதல் கட்டமாக யாழ் பாதுகாப்பு படைத் தலைலமையகத்திற்கு சென்று யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை வியாழக் கிழமை (30) ஆம் திகதி சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது யுத்தத்திற்கு பின்பு இராணுவத்தின் பொறுப்புகள் மற்றும் பொதுவான விடயங்கள், இன ஒற்றுமை குறித்த கருத்துகளை மேம்படுத்துவதற்காக சமூகத்துடன் தொடர்புடைய சிறப்பு ,கவனம் திட்டங்கள்., பொதுமக்களுக்கான சொந்தமான தனியார் நிலங்களை விடுவிப்பதில் இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின் முடிவில்மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கனடிய உயர் ஸ்தானிகருக்கு ஒரு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார். பின்பு அவர் வெளியேறுவதற்கு முன்னர் பிரமுகர்களின் வருகை புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

|