57ஆவது படைப் பிரிவினால்ஒழுங்கு செய்யப்பட்டதற்பாதுகாப்பு பாடநெறிநிறைவு
3rd December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவதுபடைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட தற்பாதுகாப்பு பயிற்சியில் இம்முறை இராணுவத்திலுள்ள 4 அதிகாரிகளும் 150 படைவீரர்களும் இணைந்திருந்தனர்.
இந்த பயிற்சிநெறியானது 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.
இதற்கு முன்பு இந்த பயிற்சிகள் இரண்டு முறை வெற்றிகரமாக நடந்து முடிவடைந்தது.
உலக ஷிடோ-ரே கராத்தே பெடரல் ஸ்ரீலங்கா கிளை மற்றும் கியோஷிரி புடோ பெடரல், ஸ்ரீலங்கா கிளையின் தலைமை பயிற்றுவிப்பாளரான சயேசி கிளெமென்ட் த சொய்சா தலைமையில் இந்த பயிற்சிகள் படையினருக்கு வழங்கப்பட்டது.
இவருடன் . இராணுவ கராதே அமைப்பின் சார்ஜன் எச்.எம்.ஜே.பி.ஜயசுந்தர மற்றும் லான்ஸ் கோப்ரல் எம்.டி.கேராஜபக்ஷ ஆகியோர். இந்த பயிற்சிகளை நடாத்தினார்கள்.
இந்த பயிற்சிளை நிறைவு செய்த படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் (29) ஆம் திகதி புதன் கிழமை57ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறமையாக பயிற்சியை நிறைவு செய்த படையினருக்கு பரிசினை வழங்கினார்.
தற்காப்பு பயிற்சியை 7 ஆவது இலேசாயுத காலாட்படையணி,9ஆவதுவிஜயபாகு காலாட்படையணி,17 ஆவது(தொ) கஜபா படையணி, மற்றும் 14ஆவதுஇலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படையினர் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
|