சாதாரணபொது தராதர பரீட்சைக்குசெல்லும் மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டன
3rd December 2017
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 மற்றும் 231 ஆவது படைத் தலைமையகத்தினால்கல்வித் திணைக்கள அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் வாழைச்சேனையிலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (25) ஆம் திகதிசாதாரண பொது தராதர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு கருத்தரங்கு ஒழுங்குசெய்யப்பட்டன.
இந்த கருத்தரங்கில் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் தொடர்பான அறிவூற்றல் நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்றது.
மேலும் இந்த கருத்தரங்கில் 110 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து பயனை பெற்றுக்கொண்டனர்.
கல்வித் துறையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களான டி.எம். தர்ஷன் மற்றும் டி.ஜயதீபன் அவர்கள் இந்த கருத்தரங்குகளை நடாத்தினார்கள்.
கருத்தரங்கு ஒழுங்குகள் அனைத்தும் 11ஆவது பீரங்கிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
|