24 ஆவது படைப் பிரிவின் ஆண்டு பூர்த்தி விழா

3rd December 2017

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் ஆண்டு பூர்த்தி விழா மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் நவம்பர் 13 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை அனைத்து சமய ஆசீர்வாத வழிபாடுகளுடன் இடம்பெற்றது.

24 ஆவது படைப் பிரிவின் கொடிகளுக்கு ஆசீர்வாத மத வழிபாட்டு நிகழ்வு பொலன்னறுவையில் அமைந்துள்ள சோமாவதி விகாரையில் இடம்பெற்றது.

அதன் பின்பு 24 ஆவது படைப் பிரிவினரால்அம்பாறை பிதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் 24 ஆவது படைத் தலைமையகத்தினால் (25) ஆம் திகதி சனிக்கிழமை தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து அம்பாறை ஶ்ரீ மாணிக்க பிள்ளையார் கோயிலில் விசேட பூஜை நிகழ்வும், மல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள மஜித்புரம் ஜம்மா முஸ்லீம் பள்ளிவாசலில் இஸ்லாம் மத வழிபாடுகளும், அம்பாறை சாந்த இக்னேஷஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் விஷேட மதவழிபாடுகளும் இடம்பெற்றன.

மேலும் 24 ஆவது படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் படைத் தளபதியினால் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு படையினர்களுக்கான விடுமுறை விடுதியும் இந்த வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டது. மேலும் (28) ஆம் திகதி படைத் தலைமையக வளாகத்தினுள் .இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

|