683 ஆவது படைப் பிரிவினரால் கல்விப் பொதுத் சாதாரண தர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு
30th November 2017
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 683 ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் 16ஆவது படையினரால் உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 2017ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் 683ஆவது படைப் பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரியான கேர்ணல் டீ பீ கே ஜயசிங்க அவர்களின் வழிகாட்டலில் 683ஆவது படைப் பிரிவின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான மேஜர் ஜே டபிள்யூ கே கமகே அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் முல்லைத் தீவிலுள்ள இப் பாடசாலை மாணவர்கள் 100 பேரிற்கு கிட்டத் தட்ட 100 கணக்கியல் வரைபட பாடசாலை உபகரணப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 16ஆவது இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரியவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் பல இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
|