53 ஆவது படைப் பிரிவின் உடற்பயிற்சி சாலையின் கட்டிட பணிகள் ஆரம்பம்

27th November 2017

தம்புள்ள இனாமலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரது நலன்புரி நிமித்தம் உடற்பயிற்சி சாலையொன்று நிர்மானிப்பதற்கான அத்திவாரமிடும் நிகழ்வு (23) ஆம் வியாழக் கிழமை படைப்பிரிவு வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த பணிகள் 53 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிளி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மஹாசங்க தேரர்களின் பௌத்த மத ஆசீர்வாத வழிபாடுகளுடன் இந்த அத்திவார பணிகள் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்விற்கு 53 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

|