கொலம்பிய சிவில் வல்லுநர்கள் மற்றும் ஆஸ்த்திரேலிய துாதர்கள் யாழ்த் தளபதியைச் சந்திப்பு
25th November 2017
வட அமெரிக்காவின் கொலொம்பியா பிரதேசத்தின் Programme of Alliances for Reconciliation (PAR)நல்லிணக்கத் திட்டத்தின்உறுப்பினர்கள் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களை கடந்த புதன் கிழமை (22) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
இதன் போது இவ்விருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்கள் யாழ் பிரதேசத்தின் சமூகத்திடுடனான நலன்புரி சேவைகள் மற்றும் அவர்களுடனான நல்லிணக்கச் சேவைகள் போன்றன பற்றி விளக்கிக் கூறினார்.
அந்த வகையில் டிஜிட்டல் ஊடகத்துரையில் காணப்படும் திரு அண்ரெஜ் ரிகாடோ அவர்களின் தலைமையில் இவ் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் தங்களது விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இலங்கை அவுஸ்த்திரேலிய துhதரகத்தின் பிரதிநிதிகளுடன் வருகை தந்ந அவுஸ்த்திரேலிய வெளிநாட்டு விவகார மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் திருமதி லோரண்ஸ் மின்சன் அம்மனியவர்களும் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியை கடந்த புதன் கிழமை (22) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த வகையில் இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விளக்கங்கள் இங்கு விபரிக்கப்பட்டது.
|