574ஆவது படைப் பிரிவினரில் தலைமையில் இடம் பெற்ற மர நடுகைத் திட்டம்
25th November 2017
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைத் தலைமையகத்தின் 574ஆவது படைப் பிரிவினரால் மீண்டுமோர் மரநடுகைத் திட்டம் கடந்த வியாழக் கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் 57ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் ஆலோசனைக்கமைய 574ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் தலைமையில் கிட்டத் தட்ட 100 மா மற்றும் தேக்குக் கன்றுகள் திருமுறுக்கண்டி பிரதேசத்தின் மாங்குளம் பகுதியில் கிட்டத் தட்ட 2கிமீ பரப்பளவில் ஏ -9 வீதி ஓரமாக நடப்பட்டது.
இந் நிகழ்வில் 57ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியவர்கள் இந் நிகழ்வில் முதல் மரக் கன்றை நட்டதுடன் 572ஆவது மற்றும் 574ஆவது படைப் பிரிவூகளின் கட்டளை அதிகாரிகள் .ஒட்டு சுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் .வடக்கு வன விலங்கு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் பல இராணு உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டார்.
|