நாகேந்திரம் புர பாடசாலை சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு
25th November 2017
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைத் தலைமையகத்தின் 573ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 1ஆவது பிரிவினரால் பரந்தன் பிரதேச நாகேந்திர புர முன்பள்;ளிச் சிறார்களுக்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கடந்த செவ்வாயக் கிழமை (21) பகிந்தளிக்கப்பட்டது.
அந்த வகையில் இப் பாடசாலையைச் சேர்ந்த 19முன்பள்ளிச் சிறார்களுக்கு இப் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வானது 57ஆவது படைத் தலைமையக தளபதியவர்களின் கண்காணிப்பின் கீழ் 573ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் ஆலோசனைக் கமைய இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 1ஆவது பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பண்டார அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
|