முல்லைத்தீவு படையினருக்கு ‘சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தௌிவூட்டல்

16th November 2017

இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியின் மேற்பார்வையில் அவரது படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் படையினருக்கு ‘சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தௌிவூட்டல் நிகழ்ச்சி (15) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.

இணையதளம் பிழையின்றி பயண்படுத்துமை,சமூக ஊடகம்,தீங்கிழைக்கும் அறிக்கைகள் மற்றும் சமூக சட்டங்கள், ' ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் பாவிப்பது தொடர்பாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தில் தௌிவூட்டப்பட்டது.

இந்த தௌிவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தில் 12 ஆவது சமீக்ஞை படையணியின் கட்டளை அதிகாரியான கேர்ணல் பக்ஷவீர அவர்கள் விரிவுரைகளை ஆற்றினார். இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு 44 இராணுவ அதிகாரிகளும், 100 படை வீரர்களும் பங்கு பற்றி பயணைப் பெற்றுக் கொண்டனர்.

புதிய இராணுவ தளபதியாக பதவியேற்ற லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் உலக அளவில் சவால்களை எதிரகொள்வதற்கு எதிராக சைபர் செக்யூரிட்டி பற்றி கற்றலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தியிருந்தார்.

|