கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள்

16th November 2017

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவினால் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்த சிரமதான பணிகள் பரந்தன் பிரதேசத்தில் இடம்பெற்றன.

இந்த டெங்கு ஒழிப்புத் திட்ட பணிகள் முதலாவது சிங்க ரெஜிமேன்ட் மற்றும் 16ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணியின் 50 இராணுவத்தினர் உட்பட பொலிஸார் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நவம்பர் மாதம் 10 , 11 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் வீடுகள் ,அரச பணிமனைகள்,தனியார் நிறுவனங்கள் ,ஆலயங்கள்,பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் இடம்பெற்றது.

|