யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் உதவி
15th November 2017
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் அடைமழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு யாழ் பாதுகாப்பு படைப் பிரிவினரால் உதவிகள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தை அண்டிய செட்டியார்தோட்டம், திருநெல்வேலி மற்றும் பரவகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இந்த அடைமழையினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இப்பிரதேச மக்களுக்கு இரவு உணவுகள்,குடிநீர்ப் போத்தல்கள் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வழங்கப்பட்டது.
மேலும் செட்டியார்தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ மருத்துவ பிரிவினரால் நடமாடும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது.
|