புதுக்குடியிருப்பு சாதாரண பொது தராதர பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு
13th November 2017
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எச்.ஆர்.எம் பெர்ணாந்து அவர்களால் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
இந்த கருத்தரங்கு முல்லைத்தீவு சாதாரண பொது தராதர பரீட்சை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் (11) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு 405 பாடசாலை மாணவர்கள் சமூகமளித்தனர். இவர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவு வசதிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வசதிகள் அனைத்தும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் பணிப்புரைக்கு அமைய இடம்பெற்றது.
கருத்தரங்கின் சிறப்பு விரிவுரைகளை திரு.கே வெல்வராசா,ஆர்.ஆர். ஆனந்தன் போன்ற சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நிகழ்த்தினார்கள்.
இந் நிகழ்விற்கு முல்லைத்தீவு கல்வி வலைய பணிப்பாளர் சுப்பிரமணியம்,ஆசிரிய ஆலோசகர் உதய குமார்,அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|