முல்லைத் தீவு பட்மிட்டன் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய 64ஆவது படைப் பிரிவினர்
10th November 2017
முல்லைத் தீவு மாவட்ட செயலாளர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க முல்லை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் ஒருங்கிணைப்போடு முல்லைத் தீவு மாவட்ட பட்மிட்டன் போட்டிகள் இம் மாதம் 6-7ஆம் திகதிகளில் 64ஆவது படைத் தலைமையக உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
அந்த வகையில் இவ் விளையாட்டிற்கான அனைத்து ஒழுங்குகளையூம் 64ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த ஜயவீர அவர்களின் தலைமையில் தேவையான குடிநீர் போன்ற அனைத்து வசதிகள் வழங்கப்பட்டன.
இப் போட்டிகள் முல்லைத் தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வண்ணம் நீர்ப்பாசன திணைக்களம் , விவசாயத் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சைசு போன்றவற்றின் 100ற்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பட்மிட்டன் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
|