முய்தாயில் பயிற்ச்சிகளைப் பெற்ற 30 இராணுவ விளையாட்டு வீரர்கள்
10th November 2017
இலங்கை இராணுவ முய்தாய் கழகத்தின் 30 இராணுவ வீரர்கள் இலங்கை முய்தாய் சங்கத்தினால் கண்டி திகன விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இலங்கை முய்தாய் சங்கத்தின் திறமை மிக்க வீரரான லெட்சிலா சொம்பெயர் அவர்களின் தலைமையில் விளையாட்டுப் பயிற்சிகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350 விளையாட்டு வீரர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.
இப் பயிற்ச்சிகள் இலங்கை இராணுவ முய்தாய் சங்கத்தின் பிரதானியான மேஜர் ஜெனரல் மனோஜ் முந்தநாயக்க , இராணுவ விளையாட்டு பயிற்சிகளின் பயிற்று விப்பாளரான லெப்டினன்ட் கேர்ணல் பி பி சி பெரேரா மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான 25ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டுப் பயிற்ச்சிப் பட்டறையின் மூலம் இராணுவத்தினருக்கு சிறந்த பயனைப் பெறக் கூடியதாக அமைந்துள்ளது.
இந் நிகழ்வில் இலங்கை முய்தாய் சங்கத்தின் தலைவரான திரு அசோக் ஜயரத்தின மற்றும் இச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு மிரன் மிலங்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இம் முய்தாய் குத்துச் சண்டைப் போட்டியானது தாய்லாந்தில் பிரபல்யம் பெற்றுக் காணப்படுவதோடு உளவியல் ரீதியில் மனதிற்கு ஓர் அமைதியை அளிப்பதாக அமைகின்றது.
|