கிளிநொச்சி படையினருக்கு சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு
10th November 2017
இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் தலைமையில் படையினரை ஊக்குவிக்கும் முகமாக சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு என்ற ஒரு வழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த புதன் கிழமை (08) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இந்த கருத்தரங்கில் 250 இராணுவ படைவீரர்கள் கலந்து கொண்டதுடன் 'இண்டர்நெட் பகுத்தறிவு , சமூக வலைத்தளங்களில் தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள்,மற்றும் ஸ்மாட் போன்கள் மற்றும் மொபையில் தொலைபேசிகளின் பயன்பாடு போன்றவைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
12ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரியான கேர்ணல் எஸ்.பி.பி பக்ஷவீர அவர்களின் தலைமையில் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க அவர்கள் இந்த வருடம் ஜூலை மாதம் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் , உலக அளவிலான சவால்களில் பிண்ணனியில் சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு பற்றி இராணுவ படைவீரர்கள் அறிந்து கொள்வதற்கான முக்கியத்துவத்தின் காரணமாகவே இக் கருத்தரங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|