பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு படையினரால் பகிர்ந்தளிப்பு
10th November 2017
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமயைகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் கண்டி கலஹா பிரதேசத்தின் ஹிண்டகல சீவலி மஹா வித்தியாலயத்தின் 600 மாணவர்களுக்கான மதிய உணவுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (07) வழங்கப்பட்டது.
அந்த வகையில் இந் நிகழ்வானது 11ஆவது படைப் பிரிவினரின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவர்களின் ஒத்துழைப்போடு இப் படையணிப் படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.
மேலும் இப் படைப் பிரிவின் முன்னய சிவில் உத்தியோகத்தரான திரு டீ எம் திலகரத்ன அவர்கள் தமது காலம் சென்ற மகளினை நிறைவு கூறும் நோக்கில் நன்கொடையை வழங்கியுள்ளார்.
இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன , உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.
இப் பாடசாலையின் பௌத்த மத தேரர் அவர்களின் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்று நன்கே நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து இப் பாடசாலையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
|