இராணுவ உயர் அதிகாரிகளில் பங்களிப்போடு இடம் பெற்ற தியானப் பயிற்ச்சிகள்
8th November 2017
இராணுவ தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் மீண்டுமோர் தியானப் பயிற்ச்சிகள் கண்டுபோதை பவுண்சென் மனநல தியான நிலையத்தில் இராணுவ மற்றும் கடற் படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (06) இடம் பெற்றது.
இத் தியாணப் பயிற்ச்சிகளில் இராணுவத்தின் 26 உயர் அதிகாரிகள் மற்றும் 56 படை வீரர்கள் ,11 பெண் படையினர் அத்துடன் 18 கடற் படையினர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்ச்சிகள் பவுண்சென் மனநல தியான நிலையத்தில் பிரதானியான தியசெம்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இவ்வாறான தியானப் பயிற்ச்சிகள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக் கிணங்க இராணுவ உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் பணிப்பாளரான பரிகேடியர் அதுல ஹெனடிகே அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது.
அந்த வகையில் இத் தியானப் பயிற்ச்சிகள் உள ரீதியிலான ஒர் மன அமைதியை உருவாக்கும் நோக்கில் அமைகின்றது.
மேலும் இராணுவத் தளபதியவர்கள் கடந்த வருடங்களில் இவ்வாறான தியானப் பயிற்ச்சிகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.
|