கிழக்கு - பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14ஆவது ஆரம்ப நினைவாண்டு

8th November 2017

கிழக்கு - பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14ஆவது ஆரம்ப நினைவு தினத்தை முன்னிட்டு பலவாறான நிகழ்ச்சிகள் ஒக்டோபர் மாதம் 25-28ஆம் திகதிகளில் இப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் பிரிவினரின் தலைமையில் பௌத்த மத சமய வழிப்பாடுகள் சோமவதிய ரஜமஹா விகாரை மற்றும் மின்னேரிய மகாசென் விகாரையிலும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் கலந்து கொண்டதோடு அனைத்துப் படையினருக்குமான மதிய விருந்துபசாரமும் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் இறுதியில் இன்னிசை இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு இப் படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

|