கிளிநொச்சி மாவட்ட முன்னால் செயலாளரின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்ற படையினர்

7th November 2017

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவினர் காலம் சென்ற கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னால் செயலாளரான திரு திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கடந்த திங்கட் கிழமை (06) கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி பூனகிரிபிரதேசத்தில் இடம் பெற்ற இக் கிரிகைகளில் 66ஆவது படைப் பிரிவினர் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன அவர்களின் தலைமையில் இப் படைப் பிரிவினரின் உதவியோடு தற்காலிக கூடாரங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் திரு இராசநாயகம் அவர்கள் பூனகிரி பிரதேசத்தில் 1942ஆம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி பிறந்துள்ளதுடன் அவரது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் பூனகிரி மற்றும் மன்னார் பிரதேசங்களில் மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றினார்.

மேலும் இவர் தமது 35வருட சேவையின் இறுதியில் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இவரது இறுதிக் கிரிகைகளில் 66ஆவது மற்றும் 661ஆவது படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன ,கேர்ணல் பிரியந்த ஜயவர்தன மற்றும் பல உயர் அதிகாரிகள் இக் கிரிகைகளில் கலந்து கொண்டனர்.

|