அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தாய்லாந்து சக்கர நாற்காலி டெனிஸ் போட்டிகளில் வெற்றி
7th November 2017
இலங்கை இராணுவத்தின் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தாய்லாந்தில் இடம் பெற்ற அங்கவீனமுற்றவர்களுக்கான சக்கர நாற்காலி டெனிஸ் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டினர்.
அந்த வகையில் இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களாக இலங்கை சமிக்ஞைப் படையணியின் கோப்ரல் ஆல் ஏ எல் எஜ் ரணவீர முதல் சுற்றில் 6/4 என்ற விதத்திலும் இரண்டாம் சுற்றில் 5/2 புள்ளிகளைப் பெற்றதுடன் காலநிலை மாற்றம் காரணமாக போட்டிகள் சற்று தாமதமடைந்தன.
அந்த வகையில் இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களாக கோப்ரல் ஆல் ஏ எல் எஜ் ரணவீர மற்றும் லான்ஸ் பொம்பொடியர் டீ ஏ எஸ் ஆர் தர்மசேன போன்ரோர் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இலங்கை இராணுவத்தினர் தாய்லாந்தில் இடம் பெற்ற இவ்வாறான போட்டிகளில் முதல் இடம் பெற்றமை இதுவே முதல் முறையாகும்.
அந்த வகையில் இப் போட்டிகளில் மேலும் பல நாடுகளில் இருந்து நுhற்றுக்கும் மேற்பட்ட டெனிஸ் போட்டியாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பினர் போன்ரோர் கலந்து கொண்டனர்.
|