இராணுவத்தினரால் வெஹெரதென்ன மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

6th November 2017

சுவாதீன தொலைக் காட்சி (ITN) சேவையின் அனுசரனையுடன் வவுனியா> வெஹெரதென்ன ரொஷான் மஹாநாம ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் (2) அம் திகதி வியாழக் கிழமை வழங்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் சுவாதீன தொலைக் காட்சி சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சந்தன திலகரத்ன அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பாடசாலை உபகரணங்கள் சுவாதீன தொலைக் காட்சி சேவையினால் வழங்கப்பட்டது.

இப் பாடசாலை இராணுவத்தினரால் விடுத்த வேண்டுகோளுக்கமைய கிரிக்கட் விளையாட்டு வீரரான ரொஷான் மஹாநாமாவின் அனுசரனையில் நிர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் ஒழுங்குகள் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களது தலைமையில் 623 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 26 ஆவது சிங்க படையணி இணைந்து செய்திருந்தது.

இந் நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா> சுவாதீன தொலைக் காட்சி சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சந்தன திலகரத்ன> நடிகர் திமுது சிந்தக மற்றும் சுவாதீன தொலைக் காட்சி சேவையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

|