இராணுவத்தினரால் திருகோணமலை வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது
6th November 2017
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலை தள வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்தியர் ஆர்.ஏ தேவராஜா விடுத்த வேண்டுகோளுக்கமைய 22 ஆவது படைப் பிரிவினால் இந்த ஒழுங்குகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் இரத்த தானம் வழங்குவதற்காக இராணுவத்தினர் 150 பேர் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நிர்வாக சபை மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தது.
|