வெளிநாட்டு பொதுநலவாய அலுவலக பிரதிநிதிகள் கிளிநொச்சி மற்றும் யாழ் படைத் தலைமையகத்துக்கு விஜயம்

5th November 2017

ஐக்கிய ராஜதானிகளின் வெளிநாட்டு பொதுநலவாய அலுவலக பிரதிநிதிகளான ஆய்வாளர்கள் குழுவினர்களின் துாதுவரான மெசஸ் நிக் கிளிஸ்லெட், ( Messrs Nick Clissltt), பாதுகாப்பு மற்றும் நீதி ஆலோசகரான (Paul Bentail) பொல் பென்தல் ஆகியோரும் கொழும்பிலுள்ள பிரிட்டிஸ்அணையாளர் காரியாலயத்தின் பிரதி உயர் ஆணையாளரும் கடந்த புதன்;கிழமை (01)யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை தலைமையகத்தில் சந்தித்தனர்.

தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக மாநாட்டு மண்டகூடத்தில் யாழ் படைத் தலைமையகத்தின் செயல்பாடுகள் மற்றும் பயிற்ச்சியின் பிரதான பதவி நிலை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் நிசாந்த முதுமால அவர்களால் யாழ் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு மற்றும்பொறுப்புகள் சம்மந்தமாக விளக்கமளித்தார்.

கலந்துரையாடல் இறுதியில் யாழ் பாதுகாப்பு படை தளபதியவர்களினால் நிக் கிளிஸ்லெட், ( Messrs Nick Clissltt), மற்றும் (Paul Bentail)பொல் பென்தல அவர்களுக்கு நினைவு சின்னங்களையும் வழங்கினார்.

இதற்கிடையில் இப் பொதுநலவாய அலுவலக பிரதிநிதி குழுவினர்கள் வியாழக்கிழமை (02) அன்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் ஓழுங்கமைப்பின் 57ஆவது படைப்பிரிவின்கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் ஜகத் குணவர்தன அவர்களை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக சந்தித்தனர்.

இவர்களை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால்வரவேற்றதோடு இராணுவ பதிவு நிலைப்பாட்டின் உதவி பற்றிய ஒரு விளக்கத்தையும் கலந்துரையாடினார்கள்.

இந்த இறுதி சந்திப்பில் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் ஜகத் குணவர்தன அவர்களினால் நிக் கிளிஸ்லெட், ( Messrs Nick Clissltt), மற்றும் (Paul Bentail)பொல் பென்தல அவர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது.

|