2017 ஆம் ஆண்டிற்கான பராஒலிம்பிக் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்கள்

2nd November 2017

மலேசியா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் மலேசியா பரா ஒலிம்பிக் அமைப்பினால் சக்கர நாற்காலி டெனிஸ் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்த 18 ஆவது 2017 ஆம் ஆண்டிற்கான மலேசியா திறந்த நாற்காலி சக்கர போட்டிகள் குவாலா லும்பூரில் அமைந்துள்ள தேசிய டெனிஸ் மத்திய நிலையத்தில் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இப் போட்டிக்காக இலங்கை பராஒலிம்பிக் சார்பாக இலங்கை இராணுவ பராஒலிம்பிக் டெனிஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகளை பெற்றுக் கொண்டார்கள்.

இந்திய, இந்தோனிசியா, இலங்கை, தாய்லாந்து, வியட்னாம், ஜேமனய, கொரியா மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த பராஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.

இலங்கை அணியைச் சேர்ந்த சாஜன் திசாநாயக காமினி, கோப்ரல் ஆர்.ஏ.எல்.எஸ் ரணவீர, லான்ஸ் பொம்படியர் டீ.எஸ்.ஆர். தர்மசேன, கோப்ரல் எச்.எம்.எல். சேனாரத்ன மற்றும் தேசிய குழுவின் பயிற்சிவிப்பாளரான ஜகத் வெலிகல கலந்து கொண்டனர். இதில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டு சாஜன் திசாநாயக வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

இந்த விளையாட்டு வீரர்களுக்கு மலேசியாவில் உள்ள இலங்கை துாதரகத்தின் அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

|