ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

28th October 2017

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 683 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சுகந்தபுரம் வல்லிவபுரம் ஜீவா ஜோதி முன் பள்ளியில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் (17) ஆம் திகதி வியாழக் கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.

683 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 16 ஆவது பீரங்கிப் படையணி மற்றும் 7 ஆவது கெமுனு ஹேவா படையணியின் பங்களிப்புடன் இந்த அன்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு 683 ஆவது படைத் தளபதி கேர்ணல் டீ.பீ. ஜயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

|