சிவில் தொடர்பாடல் அதிகாரிகளுக்கான பாடநெறி ஆரம்பம்

26th October 2017

சிவில் தொடர்பாடல் அதிகாரிகளுக்காக 15ஆவது தடவையாக இடம் பெறும் இப் பாடநெறியானது உளநல நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இலங்கை படைக் கலச் சிறப்பணித் தலைமையகத்தில் (கொழும்பு -14) ஆரம்பிக்கப்பட்டது.

இப் பாடநெறியில் முதல் விரிவுரையானது 14ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களால் இடம் பெற்றது.

இப் பாடநெறியின் நோக்கமானது சமய மற்றும் கலாச்சார் ரீதியில் சிவில் சமூகத்துடன் ஒன்றினைப்பை உருவாக்குவதாகக் காணப்படுகின்றது.

அந்த வகையில் இப் பாடநெறியில் 29 உயர் அதிகாரிகள் பங்கேற்பதோடு எதிர் வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி இப் பாடநெறி நிறைவு பெறவுள்ளது.

இந் நிகழ்விற்கு உளநல நடவடிக்கைகள் பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் அதுல ஹெனடிகே மற்றும் கொமாண்டோ படையின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் உதித பண்டார போன்ரோரும் கலந்து கொண்டனர்.

|