படையினரால் தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிப்பு
26th October 2017
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்போடு அரசாங்கத்தினால் நடாத்தப்படும் “வகா சங்ராமிக”எனும் தேசிய திட்டத்தின் கடந்த வெள்ளிக் கிழமை(20) தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்த வகையில் தென்னை அபிவிருத்தி சங்ககத்தின் பிராந்திய நிர்வாகியான செல்வி பிரேமனி ரவிராஜனி மற்றும் 233ஆவது படைப் பிரிவினரின் கட்டளை அதிகாரியான கேர்ணல் சந்திரா ஜயவீர போன்றௌரின் தலைமையில் அம்பலான்வெளி மற்றும் கோமத்தளவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 1500 தென்னை மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்த வகையில் இந் நிகழ்வில் தென்னை அபிவிருத்தி சங்ககத்தின் உயர் அதிகாரிகள் ,233ஆவது படைப் பிரிவினரின் கட்டளை அதிகாரி , வாகரைப் பிரதேச செயலாளரான திரு எஸ் இந்திரகுமார் இச் செயலகத்தின் கணக்கியலாளரான செல்வி தர்மினி கமலநிதி , போன்ரோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் 18ஆவது படைப் பிரிவினர் , இலங்கை காலாட் படையணியின் 17ஆவது(தொண்டர்) படைப் பிரிவினர் இணைந்து வாகரைப் பிரதேசத்தின் முதுவெல்லைப் பிரதேசத்தின் பாடசாலையைச் சேர்ந்த 72 மாணவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளை புருசேகொடை விஜிதானந்த தேரர் அவர்களின் 72ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டதுடன் இந் நிகழ்வில்; 15 பௌத்த தேரர்களும் கலந்து கொண்டனர்.
|