இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வருடாந்த நிகழ்வு

25th October 2017

பனாகொட இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் இலேசாயுத படையணியின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி வருட நிகழ்வு (23) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வருகை தந்தார் .

அவரை படைத் தலைமையகத்தின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் எம்.எம். கித்சிறி அவர்கள் வரவேற்று இராணுவ மற்றும் கண்டுல (யானை) அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இறுதியாக இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் அனைவருக்கும் மதிய போசன விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த ஆண்டு வருட நிகழ்வையிட்டு (21) ஆம் திகதி பனாகொட இலேசாயுத காலாட் படையணி தலைமையக நினைவு துாபி வளாகத்தினுள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ சிரேஷ்ட உயரதிகாரிகளின் பங்களிப்புடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக மலரஞ்சலி செலுத்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

|