வெலிகந்த பாடசாலைக்கு லயன்ஸ் கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

24th October 2017

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெலிகந்த லும்பினி ஆரம்ப பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் லயன்ஸ் கழகத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டன.

தெற்கு தளங்கம 306 சீ 1 லயன்ஸ் கழகத்தினால் 30,000.00 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வெலிகந்த பிரதேசத்தில் குறைந்த வருமானங்களை பெறும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 86 பிள்ளைகளுக்கு இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் ரொஷான் குணதிலக அவரது பாரியார், ரேகா சேனாதீர, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரியான கேணல் ஆர்.ஏ.டி ரணசிங்க , பாடசாலை அதிபர் மற்றும் பெற்றேர்கள் இணைந்து கொண்டனர்.

|