சிவனொலிபாதமலை வீதியில் சரிந்த குப்பை மேட்டை இராணுவத்தினர் அகற்றினர்

22nd October 2017

நல்லதன்னி பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் 19 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் சிவனொலிபாதமலை வீதியல் சரிந்து கிடந்த குப்பை மேட்டை 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை அந்த வீதியிலிருந்து குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய 40 க்கு மேலான படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

|