படையினர் சமூக சேவைப் பணிகளில் ஈடுபாடு
20th October 2017
சீரற்க காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இரத்தினபுரி வெவல்வத்தைப் பிரதான வீதியில் தரேகந்தை எனும் பிரதேசத்தித்தின் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமான வீதியில் போக்கு வரத்து தடைப் பட்டு மக்கள் பாரிய இன்னல்களின் மத்தியில் காணப்பட்டதுடன் இந் நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் 58ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியவர்களின் மற்றும் 583ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் போன்றௌரின் ஆலோசனைக்கினங்க 583ஆவது படைப் பிரிவின் 8ஆவது கெமுனு ஹேவா படையணியினர் சுத்திகரிக்கும் பணிகளை கடந்த திங்கட் கிழமை (16) காலை 10.00 மணியளவில் மேற்கொண்டனர்.
இப் படையினருடன் வீதிப் புனரமைப்புக் குழுவினர் இணைந்து கிட்டத் தட்ட 7மணித்தியாலங்களில் வீதியைச் சீர் செய்தனர்.
|