முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு இராணுவத்தினரால் மதியபோசன விருந்து
16th October 2017
68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் (10) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சியில் அமைந்துள்ள கருணை இல்ல ஆசிரமத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறுவர்கள் உள்ளடக்கப்பட்ட 50 பேருக்கு மதியபோசன விருந்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் அஜித் கொழம்பதந்திரி மற்றும் 57 ஆவது படைத் தலைமையகத்தின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|